மறைமலை நகரில் இயங்கி வரும் போர்டு தொழிற்சாலையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொழிற்சாலையில் பணி புரிந்து வருகின்றனர்.
இந் நிலையில் அந் நிர்வாகம் தனது தொழிற்சாலையை வேறு நிறுவனத்திற்கு விற்க படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் காரணமாக தங்கள் தொடர் பணி குறித்த உறுதியை போர்டு தொழிற்சாலை செய்து தர வேண்டும் என அந்நிருவன உயர்மட்ட அலுவலர்களிடம் 2 ஆம் கட்ட பேச்சு வார்த்தையில் இன்று ஈடுபட்ட வந்த நிலையில் அப் பேச்சு வார்த்தை தோல்வியை எட்டியுள்ளதாக தெரிய வருகிறது.
செங்கல்பட்டு, செப். 14 –
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் இயங்கி வந்த போர்டு கார்கள் தயாரிக்கும் தனியார் தொழிற் சாலையில் மூடப்படுவதாக அந் நிறுவனம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் இது குறித்து அந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அந்த பேச்சுவார்த்தையில் போர்டு நிறுவனத்தை மூட கூடாது எனவும், அப்படி மூடினால் நேரடியாக நான்காயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களின் குடும்பம் பாதிப்படைவதாக தெரிவித்திருந்தனர்.
இங்கு இந்த ஊழியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், ஒவ்வொரு ஊழியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிருவாகம் அனைவருக்கும் பணியைத் தொடர்ந்து செய்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
தொழிற்சாலை வேறு நிறுவனம் வாங்கும் போது எங்களுக்கான பணி உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
அதற்கு போர்டு நிர்வாகம் எடுத்த முடிவில் எந்த வித மாற்றமும் இல்லை எனவும், வரும் மார்ச் மாதம் வரை மட்டுமே தொழிற்சாலை இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.