மன்னார்குடி, ஜூலை. 08 –
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தெற்கு வீதியில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
கடந்த ஜூலை 7-2022 அன்று லஞ்ச ஒழிப்புத்துறையின் சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறி அவர் மற்றும் அவரின் இரு மகன்கள் உள்ளிட்ட 6 பேர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து இருந்தது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் 40 க்கும் மேற்பட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை 5 மணியிலிருந்து இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். அதன் பகுதியாக மன்னார்குடி முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக 9 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வந்தவர் வீட்டிலும் இச்சோதனை நடைப்பெற்றது. மேலும் காமராஜ் அதிமுகவின் திருவாரூர் மாவட்ட செயலாளராக 20 வருடங்கள் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் வீட்டில் நடைபெற்று வரும் சோதனை பெரும் பரபரப்பை அதிமுக கட்சியினர் இடையே ஏற்படுத்தி உள்ளது.





















