பொன்னேரி, பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி..
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள அரசூர் ஊராட்சிக்குட்பட்ட சிற்றரசு கிராமத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகுச்சிறப்பாக நடைபெற்றது.
அவ்விழாவினை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கி கோ பூஜை, இரண்டாம் கால யாகபூஜைகள், தீப ஆராதனைகள் என பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு யாகசாலையில் இருந்து கடப் புறப்பாடு நடைப்பெற்றது அதில் சிவாச்சாரியார்கள் பல்வேறு புனித நதியில் கொண்டு வரப்பட்டு யாகசாலை பூஜையில் செவிக்கப்பட்ட அப்புனித நீர் அடங்கிய கடங்களை சுமந்தபடி திருக்கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து விமான கோபுரத்தின் கலசங்களில் அப்புனிநீரினை ஊற்ற இன்று காலை சரியாக 9 மணி அளவில் திருக்கோவிலின் நூதன ஆலய புணராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவானது வெகுச்சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து கோபுர கலசம் மற்றும் கிராம தேவதைகள் உற்சவர்கள் உள்ளிட்டவர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை தீபார்த்தனை காட்டப்பட்டது.
அச்சிறப்பு மிகு விழாவினைக் காண வந்த உள்ளூர் மற்றும் சுற்றப்புற மக்களென திரளானவர்கள் பக்தி பரவசத்தில் ஓம் சக்தி பரா சக்தி என உரத்த முழக்கமிட்டபடி அம்பாளை உளம் உருகி வழிப்பட்டனர்.
தொடர்ந்து பக்தர்கள் பொதுமக்கள் என அனைவருக்கும் அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அச்சிறப்பிகு விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் அக்கிராம மக்கள் மற்றும் விழாக் கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.