சோழவரம், மே. 30 –
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களின் சாதரண மாதாந்திர கூட்டம் மன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் சோழவரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜாத்தி செல்வசேகரன் தலைமையிலும், ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கருணாகரன் முன்னிலையிலும் நடைப்பெற்றது.
மேலும் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன், முரளி, ஆகியோர் கூட்டத்துக்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்கள்.
அக்கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் தங்களுடைய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகள் குறித்தும், மேலும் உடனடியாக அப்பகுதிக்கு தேவைப்படும் நலத்திட்ட பணி மற்றும் உதவிகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து ஏற்கனவே திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு ஆய்வில் இருக்கும் சாலை வசதி, மின்விளக்கு, குடிநீர் பிரச்சினை, மற்றும் அந்தந்த பகுதிகளுக்கு தேவையான அரசு கட்டிடங்கள் கட்ட வேண்டிய நலத் திட்டப்பணிகளுக்கான பணி ஆணைகளை விரைந்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்போது அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டறிந்த பெருந்தலைவர் அதுக்குறித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்வதாக அப்போது தெரிவித்தார். மேலும் அக்கூட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.






















