திருவள்ளூர், ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நகர பகுதிகளில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்படும் என்றும், படித்த இளைஞர்களுக்கு அரசு மூலம் 1, லட்சம் ஊதியத்துடன் ஒரு ஆண்டு பயிற்சி வேலை வழங்குவதாக திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் IAS அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் வாக்குறுதி அளித்துள்ளார்.
திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பெரியபாளையம், தண்டலம், தாராட்சி, ஊத்துக்கோட்டை, கச்சூர், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் IAS அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் கூட்டணி கட்சிகளான திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பேசிய போது கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மோடி தலைமையிலான பாஜக அரசு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக்கியுள்ளார் என்றும் நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தாமல் வேலை இல்லாத திண்டாட்டத்தை உருவாக்கி சாதனை படித்துள்ளதாக சாடினார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் 100 -நாள் வேலை திட்ட ஊதியத்தை 400 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர்த்துவதற்கான திட்டங்களை செயல்படுத்தப்படும் என்றும், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்க படும் என்றும் படித்த இளைஞர்களுக்கு அரசு மூலம் ரூ.1,லட்சம் ஊதியத்துடன் ஒரு ஆண்டு பயிற்சி வேலை வழங்கப்படும் என திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் IAS அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் வாக்குறுதி அளித்துள்ளார்.




















