கிருஷ்ணகிரி, ஆக. 05 –

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மூவலூர் இராமிர்தம் அம்மையார் உயர் கல்வித்திட்டம், புதுமைப்பெண் திட்டத்தில் பயன் பெறும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நேற்று நடைப்பெற்றது. இம்முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து இம்முகாமில் உரை நிகழ்த்திய மாவட்ட ஆட்சியர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக, இல்லம் தேடிக்கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், நான்முதல்வன் திட்டம், நம்பள்ளி நம் பெருமை, காலை உணவுத்திட்டம், மற்றும் பெண் கல்வி முன்னேற்றத்திற்கான புதுமைப்பெண் திட்டம் என நாட்டிற்கே முன்னோடியான பல்வேறுத்திட்டங்களை தமிழநாடு அரசு சிறப்பாக செயல் படுத்தி வருகிறதென தெரிவித்தார்.

தொடர்ந்து உரை நிகழ்த்திய மாவட்ட ஆட்சியர் தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் கல்விப் பயிலும், மாணவிகளின் உயர் கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற் படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு – பட்டயப்படிப்பு- பட்டப்படிப்பு- தொழிற்கல்வி ஆகியவற்றில் இடை நிற்றலின்றி கல்விப் பயின்று முடிக்கும் வரை, மாதம் ரூ.ஆயிரம் அம்மாணவிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுவதாகவும், மேலும் அம்மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவிப்பெறலாம் என அப்போது அவர் தெரிவித்தார்.

இப்புதுமைப் பெணி திட்டத்தினால், பெண்களுக்கு உயர் கல்வி அளிப்பதிஃ மூலம் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துகிறதெனவும், குழந்தை திருமணத்தை தடுத்தல், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தைக் குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின் படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்க செய்தல, உள்ளிட்ட முன்னேற்றங்களும், மேலும் உயர்கல்வித் திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல், போன்றவைகள் இத்திட்டத்தினால் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழி வகுக்கிறது என அப்போது மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டார்.

மேலும் இச்சிறப்பு மிக்க திட்டங்களை தமிழ்நாடு அரசு பெண்களின் முன்னேற்த்திற்காக செயல் படுத்தி வருவதை பயன் படுத்திக்கொண்டு பெண்கள் தங்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாமல் மனவுறுதியுடனும், தெளிவுடனும், மேலும் படிக்கும் வயதிலேயே சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும் எனவும், தங்கள் படிப்பிற்கான தேவையான நூல்களை நூலகங்களுக்கு சென்று எடுத்து படித்து அறிவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அப்போது பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து அவர் மத்திய மாநில அரசுகள் மூலம் நடத்தப்படும் வங்கி, ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். மற்றும் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி – 1, தொகுதி – 2 தொகுதி – 4 உள்ளிட்ட தேர்வுகளில் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற வேண்டும் எனவும், பெண்கள் பிறரைச் சார்ந்து இல்லாமல் தனக்கான சுய வருமானத்தை உருவாக்கிக் கொண்டு பாதுகாப்புடன் வாழ வேண்டும். என மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு உரை நிகழ்த்தினார்..

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற இந்நிகழ்வில், மாவட்ட சமூகநல அலுவலர் கே.விஜயலட்சுமி, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ( பொ ) சி.உமா, மாவட்ட சட்டவுதவி மைய வழக்கறிஞர் முருகேசன், வட்டாட்சியர் சம்பத், ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி சர்வகலா, கல்லூரி பேராசிரியர்கள், மற்றும் மாணவிகள் உள்ளிட்ட துறைச்சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று மேலும் இவ்விழா சிறப்பாக அமைய உறுதுணைப் புரிந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here