திருவள்ளூர் செப் 09 –
திருவள்ளூர் போக்குவரத்து பணிமனையில் தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு போக்குவரத்து ஓய்வூதியர்,மின்சார வாரிய ஓய்வூதியர் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கங்கங்கள் சார்பில் 2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு தலைவர் கே.எஸ்.சம்மந்தம் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் நிலுவையிலுள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும்,மருத்துவ காப்பீடு நிலுவைத் தொகையை நிபந்தனை ஏதுமின்றி வழங்கி அனைத்துத்துறை ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட 2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சங்கங்களின் நிர்வாகிகள் ஜெயராமன், கே.ராஜேந்திரன், சங்கரன், இராமமூர்த்தி, சந்தானகிருஷ்ணன், சுந்தரமூர்த்தி, இளங்கோவன், து.மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.