மீஞ்சூர், மார்ச். 09 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரூ.34 லட்சத்தில் புறநோயாளி பிரிவு கூடுதல் கட்டிடம் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா நடைபெற்றது.

மேலும் அதனுடன் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின விழாவும் நடைபெற்றது, அதில் 1500 க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடம்  மற்றும் கல்வெட்டு திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை  மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி வழங்கினார்.

இந்தியன் ஆயில் எல்.என்.ஜி பிரைவேட் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி பழனிவேல், அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல், அத்திப்பட்டு ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா அன்பழகன், மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் மகேந்திரவர்மன், அத்திப்பட்டு மருத்துவ அலுவலர் சுரேஷ், காட்டுப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன், கொண்டக்கரை ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், அத்திப்பட்டு குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் சௌரிராஜன், கார்த்திக், இளவரசு உள்ளிட்ட திரளான கிராம மக்கள் கலந்து கொண்டனர் விழாவின் நிறைவில் சமூக ஆர்வலர சாம்ராஜ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here