அரியலூர், ஆக. 05 –

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழக்கொளத்தூர் கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் மற்றும் எண்ணெய் பனைத்திட்டத்தின் கீழ் மாபெரும் பனைக்கன்று நடும் பணி நடைப்பெறது. மேலும் அப்பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா இன்று தெடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சி அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா முன்னிலையில் நடைப்பெற்றது.

தமிழ்நாடு முழுவதும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் தேசிய சமையல் எண்ணெய் பனைக்கன்று நடவு நிகழ்வு நடைப்பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று அரியலூர் மாவட்டத்தில் ஆட்சியர் திருமானூர் ஒன்றியம், கீழக்கொளத்தூர் கிராமத்தில் மாபெரும் எண்ணெய் பனைக்கன்று நடவுச்செய்து அந் நிகழ்வினை தொடங்கி வைத்தார்.

மேலும் தேசிய சமையல் எண்ணெய்கள், எண்ணெய் பனைத்திட்டத்தின் மூலம் 2037 ஆம் ஆண்டு வரை பாமாயில் பழக்குழைகளுக்கு – குறைந்த பட்ச ஆதார விலை நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாமாயில் பழக்குழைகளுக்கான நடப்பு ஆண்டிற்கான நவம்பர் 2022 முதல் அக்டோபர் 2023 வரை மத்திய மற்றும் மாநில அரசின் குறைந்தப்பட்ச ஆதார விலை டன்னுக்கு ரூ.13.346 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதுப்போன்று தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் அரசின் முழு மானியத்தில் கன்றுகள் விநியோகம், 4 ஆண்டுக்கு பராமரிப்பு மானியம், 3 ஆண்டுகளுக்கு ஊடுப்பயிர் மானியம், சொட்டுநீர் பாசனத்திற்கு மானியம், அறுவடை கருவிகளுக்கு மானியம், முன்னுரிமை அடிப்படையில் மின் மோட்டார் மற்றும் ஆழ்துளைக் கிணறு மானியம் உள்ளிட்ட உதவிகளும் இத்திட்டத்தில் பங்குபெறும் உழவர் பெருமக்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் இத்திட்டத்தில் பங்குபெறும் உழவர் பெருமக்களுக்கு இத்திட்டத்தினால் கிடைக்கும் பாமாயில் சாகுபடியில் குறைவான சாகுபடி செலவு, வேலையாட்கள் தேவைக்குறைவு, மழை, வெள்ளம், களவு சேதம் இல்லை, நீர், உர நிர்வாகத்திற்கேற்ப மகத்தான மகசூல், தரமான கன்று விநியோகம், உயர் தொழில் நுட்ப ஆலோசனைகள், முத்தரப்பு அடிப்படையில் வங்கிக்கடன், மேலும் இருதரப்பு ஒப்பந்த அடிப்படையில் உத்திரவாத கொள்முதல், பெரு விவசாயிகளின் பாதுகாப்பு தொழில்முறைகள் 25 முதல் 30 ஆண்டுகளுக்கு நிலையான மாத வருமானம் உள்ளிட்ட இத்திட்டத்தில் உள்ள அனைத்து சிறப்பு அம்சங்கள் குறித்து எடுத்துக் கூறினார்கள்.

மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் வேளாண்மை உழவர்களிடம் தெரிவிக்கும் போது, விவசாயிகள் பாமாயில் மர சாகுபடிகள் குறித்து, அதில் கிடைக்கும் வருமானங்கள் குறித்தும் தோட்டத்துறை அலுவலர்களிடம் தொடர்புக் கொண்டு தெரிந்துக்கொள்ளலாம். எனத்தெரிவித்தார்.

தொடர்ந்து, இன்றையதினம் 10 ஏக்கர் பரப்பளவில் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தினை அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்படுத்தி கொண்டு, அதிகளவில் சாகுபடி செய்ய முன் வந்து அதிப்படியான வருவாயினை ஈட்டிடும் படிக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து இந்நில்வில் வேளாண்மைத்துறையின் சார்பில், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இரண்டு தென்னங்கன்றுகள் வீதம் மாவட்ட ஆட்சித்தலைவரும் சட்டமன்ற உறுப்பினரும் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், துணை இயக்குநர் ( தோட்டக்கலைத்துறை ) இந்திரா, திருமானூர் ஒன்றியக்குழுத்தலைவர் சுமதி அசோகசக்கரவர்த்தி, வட்டாட்சியர் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள், விவசாயிகள், வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட திரளானவர்கள் பங்கேற்று இந்நிகழ்வினை சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here