காஞ்சிபுரம், பிப். 28 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட மின்நகர் பகுதியில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலையினை  பொது மக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் நித்யா சுகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து வாகனவோட்டிகளுக்கும் பாதசாரிகள் மற்றும் பொது மக்களுக்கும் இனிப்புகளை வழங்கி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

காஞ்சிபுரம் ஒன்றியம் கோனேரிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட மின்நகர் பகுதியில் அப் பகுதியினரின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழு நிதியின் கீழ் ரூபாய் 20 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையினை இன்று மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் நித்யா சுகுமார் ரிப்பன் வெட்டி பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து அப்பகுதியினருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகளை வழங்கினார்.

அதனையடுத்து மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் நித்யா சுகுமார் மற்றும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் ஆகியோர் தலைமையில், திமுகவினர் அப்பகுதியில் வீடு வீடாக சென்று இல்லத்தரசிகளிடமும்,வாகன ஓட்டிகள் மற்றும் சாலையோர வியாபாரிகளிடமும்,மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஈராண்டு திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளருக்கு வாக்களித்து பெருவாரிய அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற செய்திட வேண்டும் என கேட்டுக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் கோனேரிக்குப்பம் ஒன்றிய குழு உறுப்பினர் டி.ராம்பிரசாத், கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சைலேஜா சேகர் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய  அவைத்தலைவர் மாரிமுத்து,ஒன்றிய கழக துணை செயலாளர் இளஞ்செழியன்,மாவட்ட பிரதிநிதி பி.என்.ரவி,காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொறியாளரணி அமைப்பாளர் சசிகுமார்,ஆடலரசு (எ)சீமான்,மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி து‌.அமைப்பாளர் சி.எஸ்.விஜி,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன்,கிளை கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் தினேஷ் பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here