கும்பகோணம், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் அமைந்துள்ள வள்ளலார் மேல்நிலைப் பள்ளி வளாக கலையரங்கத்தில் இன்று அப்பள்ளி மாணாக்கர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி, தலைமையில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், 90 மாணவிகளுக்கும் 61 மாணவர்களுக்கும் என மொத்தம் 151 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கினார்.
மேலும் அந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் தமிழழகன், மண்டல குழு தலைவர் ஆசைத்தம்பி, பள்ளி தலைவர் தயாளன், செயலர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் கணேசன், சுதாகர், மாமன்ற உறுப்பினர் ஆனந்தராமன், வார்டு செயலாளர் குருநாதன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.