நன்னிலம், ஏப். 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்..

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே நல்ல மாங்குடியில் தீராத நோய் தீர்க்கும் அம்மனாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில்  சித்திரை திருவிழாவினை முன்னிட்டு தீ மிதி திருவிழா நடைபெற்றது.

கடந்த 14.04.2024 சித்திரை மாத முதல் நாள் அன்று  கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை திருவிழா வின் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து  விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் காப்புக் கட்டி விரதங்கள் இருந்து ஆலயத்திற்கு முன் இருக்கும் அக்கினி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.

முன்னதாக  அழகு காவடிகள் எடுத்து பக்தர்கள் நல்லமாங்குடி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். மேலும் கொடியேற்றிய நாள் முதல் தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

15 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருவிழாவில்‌ (15-ஆம் நாள்) 28.04.24 அன்று மஞ்சள் நீர் விளையாட்டுடன் இவ்வாண்டிற்கான திருவிழா நிறைவடைகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here