கும்பகோணம், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் இன்று கட்டுமான பொருட்களின் விலைவுயர்வைக் கண்டித்து, அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் மற்றும் கட்டட தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் சார்பில் இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் தலைவர் இளங்கோவன் தலைமையில் காந்தி பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
அதில் செயலாளர் சரவணன், பொருளாளர் சிவகுரு, மாநில குழு உறுப்பினர் சௌந்தர்ராஜன், கட்டட தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தலைவர் நக்கீரன், செயலாளர்கள் சுரேஷ்குமார், ஆனந்தராமன், பொருளாளர் ஐயப்பன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் அவ் ஆர்ப்பாட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கட்டுமானத்தொழில் பெரும் பங்கு வகிக்கிறது. எனவும் தற்போது அக்கட்டுமான தொழில் பின் தங்கிச் செல்லும் வகையில் அதற்கான மூலப்பொருட்களான கட்டுமான இரும்பு கம்பியின் விலை 80 சதவிகிம், சிமென்ட்டின் விலை 50 சதவிகிதமும் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. என அப்போது அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
மேலும் அதனால் கட்டுமானத் தொழில் வெகுவாக பாதிப்படைவது மட்டுமல்லாது அனைவருக்கும் வீட்டு வசதி மற்றும் அரசு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் மிகுந்த பின்னடைவு ஏற்படும். நிலைமை நிலவி வருவதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, தமிழக அரசு உடனடியாக கட்டுமானக் கம்பி மற்றும் சிமென்ட் உற்பத்தியாளர்களின் விலை உயர்வினை கட்டுப் படுத்தும் நடவடிக்கையை எடுக்கவேண்டும் எனவும், மேலும் நியாயமான விலையில் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிமெண்ட் மற்றும் கம்பி உற்பத்தியாளர்களின் வர்த்தக போக்கை கட்டுப்படுத்துவதற்காக ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும், எஃகு கம்பிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த அதன் ஏற்றுமதிக்கு உடனடியாக முழு தடையை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இரும்புத்தாது மற்றும் எஃகு ஸ்கிராப் பொருட்களுக்கு இறக்குமதி செய்வதற்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.