கும்பகோணம், ஜன. 22 –
கும்பகோணம் அருகே அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றின் மீது ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதி சுமார் 250 அடி நீளத்திற்கு திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை, இவ்விபத்து குறித்து தனியார் கட்டுமான நிறுவன அலுவலர்கள் சம்பவயிடத்தில் முகாமிட்டு விபத்து குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்
தஞ்சாவூர் விக்கிரவாண்டி இடையிலான புதிதாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இச்சாலையின் ஒரு பகுதியாக கொள்ளிடம் ஆற்றின் மீது ஒன்னரை கி.மீட்டர் நீளத்திற்கு ரூபாய் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இப்பாலத்தில் 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று நான்கு மற்றும் ஐந்தாவது தூண்களை இணைக்கும் வகையில் கான்கிரீட் போடப்பட்டது. இந்த காங்கிரீட் நேற்றிரவு திடீரென யாரும் எதிர்பாராத நிலையில் இடிந்து விழுந்தது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இவ்விபத்து குறித்து தனியார் கட்டுமான நிறுவன அலுவலர்கள் சம்பவயிடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றில் இடிந்து விழுந்த பகுதியை அப்புறப்படுத்தும் பணியிலும் தனியார் கட்டுமான நிறுவனத்தினர் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். (பட்டேல் தனியார் கட்டுமான நிறுவனம்) இடிந்து விழுந்த பகுதிக்கு யாரும் செல்ல கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.























