சென்னை, டிச. 25 –
கேளம்பாக்கம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் அடுக்கு மாடி கட்டடத்தின் 16 வது மாடியில் இருந்து கீழே குதித்து முதியவர் தற்கொலை செய்துக்கொண்டார். இவ்விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது. மேலும் அவர் பல ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லமல் மனவுளைச்சலில் இருந்து வந்ததாக போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை மாவட்டம் சொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பால்சாமி (87) இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் இவர் தொடர் சிகிச்சைக்காகவும் மேல் சிகிச்சை பெற வேண்டி சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் சுங்கச்சாவடி அருகே ஏகாட்டுரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 16வது மாடியில் வசித்து வரும் தனது மகன் சத்திய பால்சாமியின் குடும்பத்துடன் இவரும் அங்கு தங்கி வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் மகன் வீட்டிற்கு வந்த பால்சாமி சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை சரியான தூக்கம் இல்லாமலும் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்து வந்த பால்சாமி நேற்று மாலை திடீரென 16வது மாடியின் ஜன்னல் வழியே கீழே குதித்துள்ளார் விழுந்த அவர் இரத்த பெருங்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் பால்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்வம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





















