தஞ்சாவூர், ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அக்கட்சியின் சார்பில் இன்று முதல் கோடை காலம் முடியும் வரை மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் ஆணையிட்டு இருந்தார்.
அதன்படி இன்று தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் மருத்துவ கல்லூரி பகுதி செயலாளர் மனோகரன் ஏற்பாட்டில் கழக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் மா சேகர் தலைமையில் மாநகர செயலாளர் சரவணன் முன்னிலையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
இதில் பொது மக்களுக்கு ரோஸ் மில்க் இளநீர் தர்பூசணி மோர் தண்ணீர் பாட்டில் கூல்ட்ரிங்ஸ் உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இதனை அடுத்து தஞ்சை குழந்தை இயேசு கோயில் ரயில் நிலையம் பழைய பேருந்து நிலையம் கரந்தை உள்ளிட்ட பகுதிகளிலும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அதிமுக அமைப்பு செயலாளர் காந்தி, கொள்கை பரப்பு துணை செயலாளர் துறை திருஞானம், விவசாய பிரிவு துணைச் செயலாளர் சிங் ஜெகதீசன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், பகுதி செயலாளர் கரந்தை பஞ்சு, மகளிர் அணி சித்ரா அங்கப்பன் உள்ளிட்ட அக் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளானவர்கள் கலந்துக் கொண்டனர்




















