பள்ளிப்பட்டு, நவ. 14 –
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திமாஞ்சேரி சுந்தரேசன் நகரில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று மழை வெள்ளம் புகுந்தது. தகவலறிந்து திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
ஆய்வுக்கு பின் வட்டார வளர்ச்சித்துறை அலுவலரிடம் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தியதின் அடிப்படையில், ஜே.சி.பி மற்றும் ராட்சத மோட்டார்கள் போன்ற இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, மழை நீர் அகற்றும் பணியை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட்டார்.
உடன் ஒன்றியச் செயலாளர் ஜி.ரவீந்திரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளனர்.