கும்பகோணம், ஜூன். 24 –

கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள ஆரியப்படைவீடு ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் நேற்று கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவரும் மேற்கு ஒன்றிய செயலாளருமான முத்துச்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசு தலைமை கொறடா  கோவி. செழியன்  அம்மாபேட்டை  ஒன்றிய செயலாளர் தியாக. சுரேஷ், ஒன்றிய அவைத் தலைவர் லோகநாதன், பொருளாளர் இளங்கோ, துணைச் செயலாளர்கள் சண்முகம், தியாகராஜன், அனிதா செல்வராஜ், மாவட்ட பிரதிநிதிகள் அன்பழகன், குணாளன், சோழநாடு கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் சூரியமூர்த்தி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் தங்கவேலு, பகுதி  பொறுப்பாளர்கள் சசிகுமார், வைக்கம் செல்வராஜ், கோவிந்தராஜ், கல்யாணம், ரவீந்தர் உள்ளிட்ட திரளான திமுக தொண்டர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திமுகழக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி வருகை தந்து சிறுப்புரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் திமுகவை யாராலும் அழித்துவிட முடியாது எனவும், மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை எனவும், மேலும் 2015 இல் இருந்து 2023 வரை அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டு இருந்தது என அப்போது ஆவேசமாக கேள்வியெழுப்பினார்.

மேலும் மக்கள் மத்தியில் திமுக அமைச்சர் கைது என போட்டு திமுக மீது களங்கத்தை ஏற்படுத்தினார்கள். சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்த அந்த வழக்கை, அரசியல் காழ்ப்புணர்ச்சிக் காரணமாக தொடர்ந்து அவர் மீது நடைவடிக்கை மேற்கொண்டுள்ளனர் எனவும், மேலும் திமுகவுடன் மோதி வழக்கு போட்டு யாரும் ஜெயிக்க முடியாது எனவும் அப்போது தெரிவித்தார்.

மேலும், திமுக போட்ட வழக்குகளில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது எனவும், உதாரணமாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைக் கேட்டால் தெரியும் என்றார். எம் ஜி ஆர் தொடங்கி வந்தவன் போனவன் புதிதாக கட்சி தொடங்குபவன் என எல்லோரும் திமுகவை ஊழல் கட்சி என்று கூறி வந்தனர். ஆனால் இதுவரை எந்த ஒரு வழக்கிலும் திமுக மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றதில்லை என அப்போது தெரிவித்தார்.

மேலும், திமுக ஊழல் கட்சி அல்ல, கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தலில் 40 சதவீத கமிஷன் கட்சி என பட்டம் வாங்கியது பாஜகதான். எனவும், இன்று நூற்றாண்டு விழா காணும் கருணாநிதியை இழிவாக பேசாத தலைவர்களை இல்லை அவரை ஒழிப்பேன் நசுக்குவேன் என பேசியவர்கள் அனைவரையும் அடக்கம் செய்து அவர்களுக்கு மணி மண்டபங்கள் கட்டி மரியாதை செய்து அவர்கள் கதையை முடித்த பிறகுதான் உயிரிழந்தார் நமது தலைவர் என உரை நிகழ்த்தினார்.

கலைஞர் நூற்றாண்டு விழா கூட்டத்தின் நிறைவில் ஏராளமான பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிளை அக்கட்சியின் சார்பில் வழங்கினார்கள்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here