கும்பகோணம், ஜன. 04

கும்பகோணத்தில் உள்ள கார்த்தி வித்யாலயா பள்ளியில் இன்று மார்கழி பூக்கள்  என்றத் தலைப்பில் கோலப்போட்டி நடைபெற்றது. இக்கோலப் போட்டியை பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் துவக்கி வைத்து உரை நிகழ்த்தும் போது, மார்கழி மாதம் பிறக்கிறது என்றாலே நம் மனதில் முதலில் தோன்றுவது முன்பனி, கோலம், பஜனை, கோவில்பிரசாதம். தினமும் போடும் கோலத்தை விட மார்கழியில் போடும் கோலத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு எனவும்,

மார்கழி மாதம், ஓசோன் படலம் பூமிக்கு அருகில் இருப்பதால் அதிகாலையில் எழுந்து கோலம் போடுவது உடலுக்கு மிகவும் நல்லது  என அப்போது அவர் குறிப்பிட்டார்.

எனவே அதிகாலையில் குளித்து கோவிலுக்கு செல்லும் வழக்கமும் மார்கழியில் வந்தது. கோலங்களில் தான் எத்தனை வகைகள் புள்ளிக்கோலம், கோட்டுக்கோலம், சித்திரக்கோலம், சிக்குக்கோலம், வண்ணக்கோலம் என பலவிதம் உண்டு எனவும், மேலும் புள்ளிகளை மனக்கணக்கு போல நினைவில் வைத்துக் கொண்டு, அழகாகவும், நேர்த்தியாகவும் போடும் போது கிடைக்கும் மன மகிழ்வுக்கு அளவே இல்லையென தெரிவித்தார்.

அத்துடன் நாம் புள்ளிகளை இணைக்க கோடு போடும் போது, நம் சிந்தனைகளை ஒருமுகப்படுத்துவதால் மனதிற்கும், மூளைக்கும் நல்ல பயிற்சி கிடைக்கிறது. மேலும், அத்தோடு, நாம் வாசலில் அரிசிமாவில் கோலம் போடுவதால் எறும்பு, பறவைகள் உண்டு வாழ அவற்றிற்கு நல் உணவும் கிடைக்கிறது. என்றார்.

தொடர்ந்து, பறவைகளும், அணிலும் சாப்பிடும் அழகே தனி எனவும், கிராமத்தில் வாசலில் நீர் தெளித்து, ஈர மண்ணில் கோலம் போட்டு, அதன் நடுவே சாணி பிடித்து வைத்து, அதில் பரங்கிப்பூ வைத்தாலே வீட்டிற்கு தெய்வீகக்களை வந்துவிடும் என்பது ஐதீகம்என்றார்.

மேலும், பொங்கலுக்கு, பொங்கல் பானை, கரும்பு என வரைந்து, அதற்கு வண்ணம் கொடுத்து, பொங்கலோ பொங்கல் என எழுதி அனைவரையும் வாழ்த்தும் பழக்கம் இன்று வரை உள்ளது. என்று தெரிவித்தார்.

மேலும் இப்போட்டியில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் பெண் குழந்தைகள் மீதான பாதுகாப்பு குறித்தும் மரங்களையும் விவசாயத்தையும் பாதுகாப்போம் முகநூலை கைபேசியை தவிர்ப்போம் தமிழர் பண்பாடு இயற்கை பாரம்பரிய கலைகளை போற்றுவோம் என்று எடுத்துரைப்பதாக கோலங்கள் அமைந்திருந்தது.

இதில் ரங்கோலி கோலங்கள் புள்ளி கோலங்கள் இடம் பெற்றிருந்தன. கோலப்பொட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த 10 கோலங்களுக்கு பட்டுப் புடவைகள் பரிசாக வழங்கப்பட்டன.

மேலும், கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அம்பிகாபதி மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்படையச் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here