கும்பகோணம், மார்ச். 30 –

கும்பகோணம் அடுத்துள்ள ஆடுதுறை  பேரூராட்சித்தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பாமக கட்சியைச் சேர்ந்த ம.க ஸ்டாலின் இன்று பேரூராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின் செய்தியாளர்கள் சந்திப்பில் தமது தலைமையிலான நிர்வாகம் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் பற்றி செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

அப்போது, மறைந்த முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் கோ சி மணிக்கு மணி மண்டபம் கட்டப்படும். மேலும், கம்யூனிஸ்ட் தலைவர் ஏ என் கோபு பெயரில் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்றும், ஆடுதுறை பேரூராட்சியில் உள்ள 22 குளங்களும் முழுமையாக தூர்வாரி நிலத்தடிநீர் மட்டம் குறையாமல் பாதுகாக்கப்படுவதுடன் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் இலவச குடிநீர் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆடுதுறை பேரூராட்சி  தலைவர் தேர்தல், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவின் பேரில் கடந்த 23ஆம் தேதி தலைவர்   மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியின்றி தலைவராக பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த ம.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார் அதுபோலவே துணைத் தலைவராக அதிமுகவை சேர்ந்த கமலா சேகரும் போட்டியின்றி வெற்றி பெற்றார்

வெற்றி பெற்ற பேரூராட்சி தலைவர் ம .க ஸ்டாலின், மறைந்த முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் கோ சி மணி இல்லத்துக்கு நேரில் சென்று அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்திய பின் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில்   தலைவராக  ம.க.ஸ்டாலினும்  துணைத் தலைவராக கமலா சேகரும் பதவியேற்றுக் கொண்டனர்.

பின்பு செய்தியாளர்களிடம் பேரூராட்சி மன்றத் தலைவர் ம.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில்,

ஆடுதுறையில் மறைந்த முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் கோ சி மணிக்கு மணி மண்டபம் கட்டப்படும். கம்யூனிஸ்ட் தலைவர் ஏ என் கோபு பெயரில் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்றும், ஆடுதுறை பேரூராட்சியில் உள்ள 22 குளங்களும் முழுமையாக தூர்வாரி நிலத்தடிநீர் மட்டம் குறையாமல் பாதுகாக்கப்படுவதுடன் ஆடுதுறை பேரூராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் இலவச குடிநீர் வழங்கப்படும் ஆடுதுறை பேரூராட்சி பகுதியில் கொசு இல்லாத நகரமாக உருவாக்கப்படும்  ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட அரசு மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மருத்துவமனையாக மாற்றுவேன் அதே போல மருத்துவக்குடியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என்றும்  ம க ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here