திருவாரூர், ஜன. 09 –

உலக தமிழ் மக்கள் அனைவரும் தை பொங்கல் திருநாளில் மண்பானையில் பொங்கல் வைத்து மண்பாண்டத் தொழில் புரியும் குயவர்கள் வாழ்வாதாரத்தை காத்திடவும், இழந்த பாரம்பரியத்தை திரும்ப மீட்டிடும் வகையிலும், திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் தனியார் கல்லூரி மாணவிகள் மண்பானை, கரும்பு, இஞ்சி மற்றும் மஞ்சள்  கொத்து பனங்கிழங்கு போன்றவைகளை வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

மேலும் தை திருநாள் விழாவிற்காக பொது மக்களுக்கு விலையில்லா கரும்புகள் வழங்கி வரும் தமிழ்நாடு அரசுக்கும் அக்கல்லூரி மாணவிகள் தங்கள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ்நாட்டின்  பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் தை திருநாளன்று உலகம் முழுவதும் வாழும் தமிழ் மொழி பேசும் மக்கள் அனைவரும் அந்நாளில் மண்பானையில் பொங்கல் வைத்து மண்பாண்டங்கள் தொழில் செய்யும் குயவர்கள் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டியும், பாரம்பரிய முறையினை மீட்டிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி நிறுவனம் மற்றும் மகரிஷி பள்ளி மாணவ மாணவிகள் இணைந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனுக்கு இன்று மண்பானை, கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து கொடுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

மேலும், கடந்த காலங்களில் குறிப்பாக நமது முன்னோர்கள் சமையல் மற்றும் குடிநீருக்காக மண்பானையினை பயன்படுத்தி வந்ததால் நோயற்ற வாழ்வோடு வாழ்ந்து வந்தார்கள்,

ஆனால் தற்போது மாறி வரும் உலகத்திற்கு ஏற்றவாறு மக்கள் பித்தளை மற்றும் சில்வர் போன்ற உலோகத்தினால் ஆன பொருட்களை பயன்படுத்துவதனால், பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படுவதாகவும், அதில் இருந்து நாம் படிப்படியாக மீண்டு வர குறைந்தப் பட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாவது இதுப்போன்ற திருநாளில் மண்ணால் ஆன பொருட்களைப் பயன்படுத்துவோம் என்றவாறு அதன்  முதற் கட்டமாக மாவட்ட ஆட்சியரிடம் மண்பானையை வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குனர் விஜய் உள்ளிட்ட ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here