காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது

காஞ்சிபுரம், மார்ச். 8 –

கோயில் நகரம் என புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் அருள்மிகு ஏலவார்குழலி எனும் காமாட்சியம்மை இடங்கொண்ட ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயில் கிபி 15-ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது கோயிலின் முன்பு 192 அடி உயரமும் , 82 அடி அகலம், 115 அடி நீளம் கொண்டு கம்பீரமாக ராஜகோபுரம் நுழைவுவாயில் அமைந்த திருக்கோயில் ஆகும்

இத்திருக்கோயில் தேசமெல்லாம் புகழ்ந்தாடும் கச்சித் திருவேகம்பன் செம்பொற்கோயில் என மாணிக்கவாசகப் பெருமானால் புகழ்ந்தோதப் பெற்று விளங்கும் இத்திருத்தலம்

திருவருள் நெறித் தமிழ் மறையாம் தேவாரத் திருப்பதிகங்களை பெற்றதும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஈசனைப் பாடி இடக்கண் பெற்றதும், பொன் வேண்டித் திருப்பதிகம் பாடிப் பொன் பெற்றதும் , திருக்குறிப்புத் தொண்டர், சாக்கியநாயனார், காடவர்கோன் நாயனார் முதலிய திருநெறித் தொண்டர்கள் முக்தியடைந்தது என அற்புதங்கள் பல நிறைந்ததுஇத்திருக்கோயிலின் பிலவ ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா நேற்று மாலை விநாயகர் உற்சவத்துடன் துவங்கியது

நேற்று துவங்கி 15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் காலை மாலை என இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் அருள்மிகு ஏகாம்பரநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்

இந்த பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவ பெருவிழாவில் 13-ஆம் தேதி அறுபத்தி மூன்று நாயன்மார்கள் உலாவும் , அன்று மாலை வெள்ளித்தேர் உற்சவமும் , 14ஆம் தேதி மகா ரத உற்சவம், பதினேழாம் தேதி இரவு பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும்

தலம் மகிமையை விளக்கும் வெள்ளி மாவடி சேவை 16ஆம் தேதி இரவு நடைபெறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொண்டு ஏலவார்குழலி அம்மை உடனுறை ஸ்ரீ அருள்மிகு ஏகாம்பரநாதர் சுவாமியை தரிசிப்பது வழக்கம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here