ராமநாதபுரம், செப். 13- ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை கிராமத்தில் அருள் பாலித்துள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் 10க்கும் மேற்பட்ட கருட பகவான் வட்டமிட்டதை கண்டு மக்கள் அதிசயித்து போய் வணங்கினர். தொடர்ந்து கும்பாபி ஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது.

ராமநாதபுரம் வாலாந்தரவை கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம் நவக்கிரக ஹோமம் தொடர்ந்து முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. கும்பாபிஷேக தினத்தில் காலை சூரிய பூஜை, கோமாதா லட்சுமி பூஜை இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து மூன்றாம் காலயாகசாலை பூஜை நடந்தபின் ஊர் முக்கியஸ்தர்கள் புனிதநீர் கும்பங்களை சுமந்து கோயிலை வலம் வந்து கடம்புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. காலை 9.43 மணிக்கு மேல் 10.45 மணிக்குள் கோபுர கலசங்களில் வேதவிற்பன்னர்கள் வேதங்கள் முழங்க புனிதநீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை காணாத வகையில் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றும் போது 10க்கும் மேற்பட்ட கருடபகவான் வானத்தில் வட்டமிட்டு வந்ததை கண்டு ஊர் மக்கள் கும்பிட்டனர். கும்பாஷேகம் முடிந்ததை தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் விசேஷ பூஜைகள் நடந்தது. பக்தர்கள் முத்துமாரியம்மனை தரிசித்து முத்துமாரியம்மன் அருளை பெற்றுச்சென்றனர். கும்பாபிஷகேம் முடிந்த ஒரு மணி நேரத்திற்குள் திடீரென பலத்த மழை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. வறட்சியாக இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் கும்பாபிஷேகம் விழா முடிந்தவுடன் நல்ல மழை பெய்தது விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் மகிழ்ச்சியை அளித்தது. மழை பெய்து முடிந்தபின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை வாலாந்தரவை கிராம பொது மக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

 

தென்மாவட்ட தலைமைச் செய்தியாளர் இ.சிவசங்கரன்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here