கும்பகோணம், அக். 19 –

திருப்பனந்தாள் அருகே இடையாநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (70). அவரது மனைவி மாரியம்மாள். சேட்டுவின் தம்பி வடிவேல் மகன் நாகராஜன். இரு குடும்பத்தினர் வீடுகளும் அடுத்தடுத்து உள்ளது.

இந்நிலையில் இரண்டு வீட்டிற்கு இடையே உள்ள இடம் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு இரு குடும்பத்தினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இந்நிலையில் நாகராஜன் நேற்று முதியவர் சேட்டுவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முதியவர் சேட்டு நாகராஜூக்கு சொந்தமான வயலின் மோட்டார் கொட்டகையில் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து இருப்பது தெரியவந்தது. இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த திருப்பனந்தாள் காவல்துறையினர் சேட்டுவின் உடலை கைப்பற்றி திருப்பனந்தாள் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தமது கணவர் சாவில் மர்ம இருப்பதாக மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் திருப்பனந்தாள் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here