குடவாசல், மே. 18 –
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிட கூடுதல் பணி பொறுப்பு வகித்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடந்த 2010 முதல் 2022 வரை 12 வருடங்களாக கூடுதல் பணி புரிவதற்கான ஊக்கத் தொகை இதுவரை வழங்கப்படாத கண்டித்து கூடுதல் மையத்தின் சாவியை ஒப்படைக்கும் மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக குடவாசலில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது.
மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.விக்டோரியா தலைமை தாங்கினார், சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன் கண்டன உரையாற்றினார், போராட்டத்தை விளக்கி மாவட்ட தலைவர் அ.பிரேமா,வி.தவமணி,ஆகியோர் பேசினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் எம்.திரிபுரசுந்தரி, மாவட்ட பொருளாளர் பி.மாலதி மற்றும் உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகி கே.ஆறுமுகம்,குடவாசல் வட்டார நிர்வாகிகள் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.