கும்பகோணம், ஏப். 06 –

கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை பேரூராட்சியின் முதல் கூட்டம் இன்று பேரூராட்சி தலைவர் ம.க ஸ்டாலின் தலைமையிலும், செயல் அலுவலர் (பொ) சிவலிங்கம் மற்றும் துணை தலைவர் கமலா சேகர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மொத்தமுள்ள 15 வார்டு உறுப்பினர்களில், இரு திமுக உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்கவில்லை  (கோ சி இளங்கோவன் – மறைந்த முன்னாள் அமைச்சர் கோ சி மணியின் மகன்  கோ சி இளங்கோவன் மற்றும் சுகந்தி) எஞ்சிய 13 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

இக்கூட்டத்தில் மொத்தம் 27 பொருட்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அவை தீர்மானமாக உறுப்பினர்களால் ஏற்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அதில், மறைந்த முன்னாள் அமைச்சர் கோ சி மணிக்கு மணி மண்டபம் அமைத்தல், பேரூராட்சிக்கு சொந்தமான வீரசோழன் திருமண மண்டபத்தை குளிர்சாதன வசதியுடன் நவீன முறையில் புனரமைத்து, வீரசோழன் கோ சி மணி திருமண மண்டபம் என பெயர் மாற்றம் செய்தல், ஆடுதுறை பேருந்து நிலையத்தை அரசிடம் இருந்து நிதியுதவி பெற்று, புனரமைத்திடவும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கழிவறைகளையும், சீரமைத்திடவும், பேரூராட்சி தூய்மை பணியாளர்களின் சிதலமடைந்துள்ள 8 குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதிதாக 13 குடியிருப்புகளை கட்டவும், அரசிடம் அனுமதி பெற்ற பேரூராட்சி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று அமைத்திட வேண்டும், முத்தான்படுகை சுடுகாட்டினை, நவீன எரிவாயு தகனமேடையாக மாற்றி அமைத்திடவும், பள்ளி கல்லூரி நேரங்களில் மாணவர்களின் வசதியை கருத்தில் கொண்டு, முன்பு இயக்கப்பட்டதை போல கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இயக்க கேட்டுக் கொள்வது என்றும்,

பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரி மழைநீரை முழுமையாக சேமித்து, நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் தொடர்ந்து பராமரிக்கவும், பேரூராட்சிக்குட்பட்ட கும்பகோணம் மயிலாடுதுறை சாலை மற்றும் ஆடுதுறை திருநீலக்குடி சாலையிலும் முக்கிய இடங்களில் 25 சிசிடிவி கேமராக்கள் அமைத்து குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், மீறி நடந்தால், அதன் மூலம் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கும் வகையிலும் தனியார் பங்களிப்புடன் அமைத்து தொடர்ந்து பராமரித்திடவும், பேரூராட்சி பகுதி முழுவதும் அனைத்து தெருக்களுக்கும் புதிதாக தெரு பெயர் பலகைகள் அமைத்திடவும் முடிவு செய்தல் உள்ளிட்ட 27 தீர்மானங்கள் ஏகமனதாக இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடதக்கது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here