திருவொற்றியூர், மார்ச். 27 –
இன்று மணலி சின்னச்சேக்காட்டில் பெரு நகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற 22வது வார்டு உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நடைப்பெற்றது. அவ்விழாவில் திமுக வட்டச் செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான த. கரிகாலசோழன் தலைமை ஏற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
பெரு நகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற 22 வது வார்டு உறுப்பினர் தீர்த்தி அலுவலகத்தை திறந்து வைத்தார். மேலும் அலுவலகத்தில் சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அருணாசலம், எஸ்.சுந்தர், என். ரமேஷ் பி.டி.சரவணன் பகுதி தலைவர் இ.ரமேஷ், மணலி சர்க்கார் தலைவர் சீனிவாசன், தக்ஷிணாமூர்த்தி, வட்ட துணைத் தலைவர் 22-வது காங்கிரஸ் நிர்வாகிகள் அருணகிரி, சிபிஎம் அண்ணாதுரை, விசிக மாரிமுத்து, பாஸ்கர் வாழ்வுரிமை கட்சி, மதிமுக இளங்கோவன் மற்றும் திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாமன்ற உறுப்பினர் தீர்த்தி நிகழ்த்திய நன்றியுரையில் வாக்களித்த மக்களுக்கும் வெற்றி பெற பணியாற்றிய மதசார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் தோழர்களுக்கும், மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் நன்றியினை தெரிவித்தார்.





















