காஞ்சிபுரம் , செப் . 25 –

75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக இந்திய சுதந்திர ஓட்டம் 2.0 என்ற தலைப்பில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டும் காஞ்சிபுரத்தில் மாரத்தான் நடைபெற்றது

 

காஞ்சிபுரம் மாவட்ட பேரறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கொடி அசைத்து துவக்கி வைத்தார்

இந்திய குடிமக்கள் அனைவரும் தினமும் 30-நிமிடங்கள் உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்கி ஆரோக்கியமாக இருக்கும் வகையில் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நேர்மையாகவும் 100 சதவிகிதம் வாக்களிக்க கோரியும் இந்த மாத்தான் விழிப்புணரவு நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் துவங்கிய இந்த மாரத்தான் விழிப்புணர்வு ரயில்வே சாலை, பேருந்து நிலையம், மூங்கில் மண்டபம் வழியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவுபெற்றது.

இந்த மாரத்தான் போட்டியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு  பரிசுககளும், கோப்பை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here