தஞ்சாவூர், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
உலகம் முழுவதும் இன்று காதலர் தினத்தினை காதலர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ரோஜாப்பூ மலர்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லெட் மற்றும் விதவிதமான பரிசு பொருட்களை வாங்கி தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பரிசளித்து தங்கள் காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் தங்களின் இணையுடன் சுற்றுலா தலங்கள், பூங்கா, திரையரங்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் தாலி கட்டும் போராட்டம் நடத்த வந்தனர். அவர்களிடம் காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இருந்தபோதும் கோவில் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் காதலர்களையும் கோவிலுக்குள் அனுமதிக்காமல் அவர்களுக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர்.






















