காஞ்சிபுரம், செப். 05 –
காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு 12 கிராமங்களில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புகள், எடுக்கப்படுவதால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறி விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்து கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் கடந்த வாரம் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கருத்து கேட்ப்பு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி கலந்து கொண்டு பரந்தூர், வளத்தூர், மேல் பொடவூர்,தண்டலம்,மடப்புரம், நெல்வாய், ஏகனாபுரம், இடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், அக்கம்மாபுரம், சிங்கிலி பாடி, உள்ளிட்ட கிராம மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்
இதனைத் தொடர்ந்து பரந்தூர் விமான நிலையம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாமக கௌரவ தலைவர் ஜி .கே. மணி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று கௌரவத் தலைவர் ஜி கே மணி தலைமையில் 7 பேரு கொன்ட குழு பரந்தூர் ,ஏகனாபுரம் ,மங்கலம் உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டு அறிந்தும் விவசாய நிலங்களை ஆய்வுகளை மேற்கொண்டனர் .பின்னர் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர் பெரும்பாலான அப்பகுதி மக்கள் விமான நிலையம் அமைவதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் ஒட்டு மொத்தமாக தெரிவித்தனர் .மேலும் இதே போன்று அருகிலுள்ள கிராமங்களில் தொழிற்சாலைகளுக்காக நிலம் எடுக்கப்பட்டது. மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வழங்குவதாக தெரிவித்தனர் .ஆனால் இதுவரை வேலை வழங்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சானதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசி அவர் இந்த பொது மக்களிடம் கேட்டறிந்த கருத்துக்களை தமிழக அரசு இடம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தெரியப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது முன்னாள் நடுவன் தொடர்வண்டி துறை இணை அமைச்சர் ஏ .கே .மூர்த்தி , பொருளாளர் திலகவதி பாமா ,வழக்கறிஞர் பாலு ,காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் பெ.. மகேஷ் குமார் ,கிழக்கு மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன் ,மாவட்ட தலைவர் உமாபதி , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலம்மாள் உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.