திருமீயச்சூர், பிப். 17 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா, திருமீயச்சூர் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி திருக்கோவில் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமம் தோன்றிய திருத்தலமாக.அத்திருக்கோவில் விளங்கி வருகிறது.

மேலும் அச்சிறப்புமிக்க அத்திருக்கோவிலில் மாசி மாத ரத சப்தமியை முன்னிட்டு கடந்த 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் திருத்தேரோட்டம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து நேற்று சோமஸ்கந்தர் சுவாமி, லலிதாம்பிகை அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா காட்சி நடைபெற்று கோவிலின் எதிரே உள்ள சூரிய புஷ்கரணி தீர்த்த குளத்தில், அஸ்திர தேவர் சுவாமிக்கு பால், சந்தனம், மஞ்சள், இளநீர் போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு  தீர்த்தவாரி நடைபெற்றது. அந்நிகழ்வைக் காண வந்திருந்து திரளான பக்தர்கள் சுவாமியை மனமுருகி வேண்டி வழிப்பட்டு உளம் மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here