
உத்திரமேரூர், டிச. 20 –
உத்திரமேரூர் வட்டார வளர்ண்ணி அலுவலக ஊட்டரங்கில் பள்ளி மேலாண்மை குழு ணார்பில் மன்றதலைவர்களுக்கான பநிற்ணிக் கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் முனிசுப்பராயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தின் போது ஊராட்சி மன்ற தலைவர்கள் பள்ளி வளர்ச்சியின் முக்கிய பங்கு குறித்தும், அரசு பள்ளிகளில் மாணவ- மாணவியர்கள் சேர்க்கை அதிகரிப்பது குறித்தும், மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் திட்டங்கள் அனைத்தும் உரிய மாணவர்களிடம் சென்றடைவதை உறுதி படுத்துதல் குறித்தும், பள்ளி செல்லா குழந்தைகள் இல்லா நிலையை உருவாக்கிடுவது, பள்ளி வளர்ச்சி மற்றும் மாணவர்கள் கற்றல் திறன் அதிகரிப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது
மேலும் பள்ளியின் வளர்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்களின் முக்கிய பங்குகள் குறித்து உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்வின் போது ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.




















