திருவாரூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் நகர்ப்பகுதிக்கு உட்பட்ட நாலுகால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் அவருடைய மகன் கிஷோர் வயது 11. இவர் திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்ற சிறுவன் கிஷோரை இருசக்கர வாகனத்திலும், நான்கு சக்கர வாகனத்திலும் கடத்த முயற்சித்ததாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் ஆறாம் வகுப்பு மாணவன் கிஷோர் பேசியதாவது..
நான் பள்ளி முடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருக்கும் பொழுது இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் வந்ததாகவும் அவர்கள் என்னை வண்டியில் ஏறு என கூறியதாகவும் நான் ஏறவில்லை எனவும் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்
அதன் பிறகு ஒரு நான்கு சக்கர வாகனத்தில் உள்ளவர்கள் என்னை பிடித்து இழுத்ததாகவும் எனக்கு 50 ரூபாய் பணமும் குர்குரே பாக்கெட் கொடுத்ததாகவும இந்த தெரிவித்துள்ளார்
மேலும் என்னுடைய பள்ளி புத்தகப்பை கீழே விழுந்து விட்டதாகவும் எனக்கு அவர்கள் கொடுத்த 50 ரூபாய் பணத்தை நான் திரும்பிக் கொடுக்கும் பொழுது பணம் கீழே விழுந்து விட்டதாகவும் அவர்கள் பணத்தை எடுக்க முயற்சி செய்யும் பொழுது நான் புத்தகப் பையை எடுத்துக்கொண்டு குர்குரே பாக்கெட்டை கீழே வைத்து விட்டு ஓடிவிட்டதாகவும் அவர்கள் என்னை பின்னால் துரத்தி வந்தார்கள் எனவும் மெயின் ரோடு வந்ததும் அவர்கள் என்னை துரத்துவதை நிறுத்திவிட்டு மீண்டும் அவர்களுடைய நான்கு சக்கர வாகனத்திற்கு சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் பேசியவர்கள் தமிழ் மொழியை சரியாக பேசாமல் திக்கி திக்கி பேசியதாகவும் தெரிவித்துள்ளார்
தற்போது கிஷோர் என்ற இந்த ஆறாம் வகுப்பு மாணவன் பேசிய தன்னை கடத்தும் முயற்சி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கிஷோர் மற்றும் அவரது பெற்றோரை நேரில் விசாரணை செய்துள்ளார்கள். மேலும் சிறுவன் தன்னை கடத்தியதாக கூறும் இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும் சிறுவன் பற்றியும் மற்றும் அவரது பெற்றோர் பற்றியும் சுற்று வட்டாரத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். தன்னை கடத்தியதாக சிறுவன் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதால் திருவாரூர் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது




















