சென்னை, பிப். 20 –

கரூர் மாவட்டத்தில் மாரடைப்பால் உயிரிழந்த கபடி விளையாட்டு பயிற்சியாளரின் மரணச்செய்திக் கேட்டு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தும் மேலும் அவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிட உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

குளித்தலை குறுவட்டம் சத்தியமங்கலம் கிராமம், கணக்குப்பிள்ளையூரில் சிறுவர்களிடையேயான கபடிப்போட்டி நடைப்பெற்றது. ( ஊர் சார்ந்த தனி விளையாட்டுக் குழு ) அப்போட்டிக்கு சிறுவர்களை அழைத்து வந்த திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் பாளையம் அஞ்சல், கரிச்சிகாரன்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் 26 வயதுடைய மாணிக்கம் என்ற பயிற்சியாளருக்கு சிறிய அளவிலான நெஞ்சு வலியிருந்தும் அச்சிறுவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வந்துள்ளார். மேலும் அப்போட்டியில் அச்சிறுவர்கள் வெற்றிப் பெற்ற நிலையில் அப்பயிற்சியாளருக்கு நெஞ்சுவலி அதிகமாகிவுள்ளது. இந்நிலையில் அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் அவ்வூரில் உள்ள அய்யர்மலை தனியார் மருத்துவமனையில் முதற்கட்ட மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து தொடர் மற்றும் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

கபடி பயிற்சியாளர் மாரடைப்பால் உயிரிழந்த அச்செய்தியைக் கேட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது மறைவுக்குறித்து மிகுந்த வேதனை அடைந்ததாகவும், மேலும் அவர் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் மாணவர்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்லையும் தெரிவித்துக்கொள்வதாக அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த கபடி விளையாட்டு பயிற்சியாளரின் குடும்பத்திற்கு, ரூ.2 இலட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here