ஒரத்தநாடு, ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சை பாராளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி கட்சி தேமுதிக வேட்பாளர் சிவனேசன் ஒரத்தநாடு ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார் தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் பகுதிகளில் மத்திய மாவட்ட கழக செயலாளர் மா.சேகர் கழக அமைப்பு செயலாளர் ஆர் காந்தி இவர்களது தலைமையில் அதிமுக கூட்டணி கட்சி தேமுதிக வேட்பாளர் சிவனேசன் இன்று காலை ஒரத்தநாடு ஒன்றியம் திருமங்கலக்கோட்டை கீழையூர், மேலையூர் ஊராட்சி, கீழ வன்னி பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
தொடர்ந்து அவர் குலமங்கலம் பகுதியில் அதிமுக தேமுதிக தேர்தல் அலுவலகத்தையும் திறந்து வைத்தார். அப்போது அப்பகுதி மக்கள் வேட்பாளர் சிவநேசனுக்கு சால்வை அனைத்தும் மலர்களை தூவியும் பட்டாசு வெடித்தும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் உடன் கழக தொண்டர்களும் கூட்டணி கட்சி தொண்டர்களும் உடன் இருந்தனர்.























