பூவிருந்தமல்லி, ஜூன். 15 –
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தமல்லி வட்டம் 1431 பசலிக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி அலுவலரும் மற்றும் வருவாய் கோட்டாட்சியருமான மு.ரமேஷ் தலைமையில் நேற்று பூவிருந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.
பூந்தமல்லி வட்டாட்சியர் செல்வம் முன்னிலை வகித்தார். ஜமாபந்தி நிகழ்ச்சியில் வயலா நல்லூர், கண்ணம்பாளையம், மேல்பாக்கம், சோரஞ்சேரி, அமுதூர்மேடு, பாரிவாக்கம், பணவேடுத்தோட்டம், பிடாரிதாங்கள், கோளப்பஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் முதியோர் தொகை வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் வழங்கினர்.
ஜமாபந்தி நிகழ்ச்சியில் கண்ணம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிகேசவன் அரசு அலுவலர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். உடன் துணைத் தலைவர் அருணாச்சலம், கவுன்சிலர்கள் கண்ணன், வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் கீதாலட்சுமி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.






















