பாபநாசம், ஏப். 21 –
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடையில் கல்விச்சங்கம் மற்றும் நூலகப்படிப்பகம் இணைந்து நடத்திய இப்தார் நோன்பு திறப்பு விழா அப்பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் நடைப்பெற்றது.
மேலும், இந்நிகழ்ச்சியில் ஊர் ஜமாத் பெரியவர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்நிகழ்வில் பங்கேற்று அவ்விழாவினை சிறப்பித்தனர்.





















