திருவாரூர், ஆக. 14 –

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட பவித்திரமாணிக்கம் மற்றும் பெரும்புகளூர் கிராமமாகும். மேலும் இவ்விரு கிராமங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவ்விரு கிராமங்களையும் இணைக்கும் சுமார் 7 கி.மீ. தூர சாலை நீண்ட காலங்களாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருப்பதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அதுக்குறித்து கிராம ஊராட்சி அலுவலகம் மற்றும்  வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்களிடம் புகார் மனு வழங்கியும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என மேலும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அதன் தொடர் நடவடிக்கையாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கத்தில் ஆட்சியரிடம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தங்கள் குறைகளை போக்கவேண்டுமென மனுவளித்தனர்.

மேலும் தாங்கள் தொடந்து புறக்கணிக்கப் படுவதால், குண்டும் குழியுமாக உள்ள அச்சாலை வழியாக தினந்தோறும் தங்களின் குழந்தைகள் பள்ளி கல்லூரி செல்வதற்கும், குடும்பத்தில் உள்ளவர்கள் வேலைக்கு செல்வதற்கும், மேலும் வயதானவர்கள் மற்றும் சிறுக்குழந்தைகள் கற்பிணி பெண்கள் என மிகவும் சிரமத்துடனே அச்சாலையில் செல்ல முடிகிறது எனத் தெரிவிக்கின்றனர்.

மேலும் தங்கள் கிராமங்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்திடாமல் புறக்கணித்தால், அடுத்த கட்டமாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.

 

பேட்டி: விஸ்வநாதன் கிராமவாசி

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here