இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நேற்று விசாகப்படடினத்தில் தொடங்கியது. புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்படும் என்று பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அதன்படி நேற்றைய போட்டியின்போது இரு நாட்டு தேசிய கீதங்களும் பாடி முடித்த பின்பு புல்வாமா தாக்குதலில் உயிர் இழந்த துணை ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது கேலரியின் சில பகுதிகளில் ரசிகர்கள் சப்தம் அதிகமாக இருந்தது. இதைக் கவனித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி கொஞ்சம் அமைதியாக இருக்குமாறு ரசிகர்களை கேட்டுக்கொண்டார். இந்திய வீரர்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆடினர்.

இதற்கிடையே, மவுன அஞ்சலி செலுத்தும்போது ரசிகர்கள் சப்தம் எழுப்பியதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். தேச பக்தி பற்றி பாடம் எடுக்கும் மக்களால் இரண்டு நிமிடம் கூட அமைதியாக இருக்க முடியவில்லை என விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here