நேப்பியர்:

வங்காளதேச கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்காளதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணி 48.5 ஓவர்களில் 232 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. முகமது மிதுன் அதிகபட்சமாக 62 ரன்னும், முகமது சைபுதீன் 41 ரன்னும் எடுத்தனர். போல்ட், சான்ட்னெர் தலா 3 விக்கெட்டும் பெர்குசன், ஹென்றி தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். 233 ரன் இலக்குடன் நியூசிலாந்து அணி ஆடி வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here