தஞ்சாவூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் நிதியை முறை கேடாக செலவு செய்ததாக கூறி தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் அருகே திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில் குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக கடந்த 10.4.2018 அன்று கோயில் நிதி ரூ.4,750 லிருந்து அறநிலையத்துறை ஊழியர்களுக்கு உணவு, தேநீர் ஆகியவற்றுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு கோயில் நிதியை எடுத்து செலவு செய்தது, விதிகளுக்கு முரணானது. இதே போல் இக்கோயிலில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இந்த நிதியை தவறான வழியில் செலவு செய்த கோயில் செயல் அலுவலர், அதை கண்காணிக்கத் தவறிய இணை ஆணையர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.




















