கீழக்கரை, ஜூலை 5-
ஏர்வாடியில் மகான் அல்குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீதுஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹா உள்ளது. 845ம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா நேற்று மாலை மவ்லித்துடன் தொடங்கியது. ஏர்வாடி மகான் அல்குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாடு விழாவாக ஏர்வாடி தர்ஹா பொது மகாசபை உறுப்பினர்கள் (ஹக்தார்) நடத்தி வருகின்றனர்.
ஜூலை 4ம் தேதி (நேற்று) மாலை 6.30மணிக்கு பாதுஷா நாயகத்தின் மவ்லித்துடன் (புகழ்மாலை) தொடங்கியது, முன்னதாக மாவட்ட அரசு காஜி சலாகுதீன் ஆலிம் உலக மக்களின் அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும் துஆ (பிராத்தனை) ஓதினார். இதை தொடர்ந்து ஜூலை 13ல் மாலை தர்ஹா வளாகத்தில் அடிமரம் ஏற்றப்படும், ஜூலை 14ல் மாலை ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெவ்வை மாகாலில் இருந்து மாலை 3 மணிக்கு கொடி ஊர்வலம் புறப்பட்டு மாலை 6.30 மணியளவில் கொடி ஏற்றப்படும். ஏற்பாடுகளை ஏர்வாடி தர்ஹா பொது மகாசபை ஹக்தார்கள் செய்து வருகின்றனர் ..