தஞ்சாவூர், பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், மாநகராட்சி நிர்வாகம் ஒரே விதமான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை கீழவாசல் சரபோஜி மார்க்கெட் சந்தை வியாபாரிகள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் கீழவாசல் சரபோஜி மார்க்கெட்டில் 308 கடைகள் மாநகராட்சி வாடகைக்கு வியாபரிகளுக்கு விட்டுள்ளது.
அதில் தேனீர் கடை முதல் மிகப்பெரிய வர்த்தக நிறுவனம் வரை உள்ளது. ந்நிலையில் அக்கடைகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் செய்யவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஒரே அளவுள்ள கடைகளுக்கு 4000 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை வாடகை நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அதனால் சிறு வியாபாரிகளால் வாடகை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டு, வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் சாலையோர கடைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் அனைத்து கடைகளுக்கும் ஒரே விதமான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். கடையை காலி செய்தவர்கள் கொடுத்த முன் வைப்புத் தொகையை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள் சரபோஜி மார்க்கெட் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.