கும்பகோணம், மே. 08 –
அனைத்து ஆசிரியர்களும் நல்லாசிரியர்களே என இன்று இரவு பாபநாசம் அருகேவுள்ள திருக்கருகாவூரில் நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி மற்றும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இவ்வாறு தெரிவித்தார்.
கும்பகோணம் அருகே பாபநாசம் ஒன்றியம் திருக்கருகாவூரில் உள்ள தொடக்கப்பள்ளியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் திருவுருவ சிலை திறப்பு நிகழ்ச்சி இன்றிரவு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் இயற்கை விவசாயி தென் சருக்கை கோ.வி அய்யா ராசுக்கு நம்மாழ்வார் விருதினையும், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தின் தமிழ் பண்டிதர் மணிமாறனுக்கு உ.வே.சா விருதினையும் மற்றும் பல்வேறு ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
அப்போது சிறப்புரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைத்து ஆசிரியர்களும் நல்ல ஆசிரியர்களே நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் மட்டும் நல்லாசிரியர்கள் என்று நினைக்க வேண்டாம் என அமைச்சர் பெருமையுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் விவசாயிகளுக்கு எண்ணற்ற வகையில் தொன்று புரிந்தவர் என்றும் குறிப்பாக காவிரி டெல்டா பாசனப் பகுதி விவசாயிகளுக்கு அருந்தொண்டாற்றினார் என்றும், தமிழக சட்டமன்றத்தில் இன்று ஆட்சி பொறுப்பேற்று முதலாமாண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு தொடங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எத்தகைய மன மகிழ்ச்சி இருந்ததோ, அதே அளவிற்கு நம்மாழ்வார் சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதும் அதே மன மகிழ்ச்சி அடைந்தேன் என நெகிழ்ச்சியுடன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
மேலும் நம்மாழ்வார் சிலை திறப்பு மற்றும் நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சியில், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் கலந்துக்கொண்டு நேதாஜி சிலையை திறந்து வைத்து பேசினார். இதில் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் பள்ளி செயலாளர் ரெங்கராசன் பள்ளி தாளாளர் சிவசண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





















