சென்னை, செப். 29 –

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு குரூப் 4 ( தொகுதி 4 ல் அடங்கிய ) 2018-2019 மற்றும் 2019 – 2020 இல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் கடந்த ஜூன் 14-2019 ஆம் நாளிட்ட அறிவிக்கை எண் 19/2019 வாயிலாக விண்ணப்பங்களை கோரியிருந்தது. இப் பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த செப் 19-2019 அன்று நடைப்பெற்றது. அத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் கடந்த டிசம்பர் 12-2019 அன்று தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது.

இத்தேர்வு தொடர்பான இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் நில அளவர், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு எதிர் வரும் அக் 11 மற்றும் 12 – 2021 முற்பகல்) தேதிகளில் நடைப்பெற உள்ளதாக தேர்வாணையம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.

மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அமைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், ஒட்டு மொத்த தரவரிசை எண் இட ஒதுக்கீடு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப் பட்ட தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியடப்பட்டுள்ளது.

தபால் மூலம் தனியே கலந்தாய்வு அழைப்பாணை அனுப்படமாட்டது

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி மற்றும் நேரம் மேலும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தினை தேர்வாணைய இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கு உறுதி அளிக்க இயலாது. கலந்தாய்வுக்கு வரத்தவறியவர்களுக்கு மறு வாய்பு கிடையாது.

மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண்கள் , ஒட்டு மொத்த தரவரிசை, இட ஒதுக்கீட்டு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப் படுவர்.

எனவே அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here