கும்பகோணம், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் மரத்துறை கிராமம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி. மேலும் அவர் திருப்பனந்தாள் அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் அப்பகுதியில் அவருக்கு சொந்தமான 20 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் மேற்கொண்டு வரும் நிலையில், அவரது வயலுக்கு செல்லும் வழிப்பாதையில் அரசு புறம்போக்கு பாதையை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்திருப்பதாக கூறப்படுகிறது.
அதனால் தன்னுடைய வயலுக்கு செல்ல விடாமல் தனிநபர்கள் தடுத்து வருவதாகவும், மேலும் அவர்கள் ஆள் வைத்து காவல்துறையினரின் உதவியுடன் தன்னுடைய வயலில் இருந்த வாகனங்களை திருடிச் சென்ற போது, அவர்களை விரட்டி சென்று மணல்மேட்டு அருகே சுற்றி வளைத்த போது, அவர்கள் வாகனங்களை சாலையில் விட்டு விட்டு தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கும் கருணாநிதி, மேலும் அது குறித்து பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல் இருப்பதாகவும் மேலும் அவர் குற்றம் சாட்டுகிறார்.
ஆளுங்கட்சியினர் கொடுக்கும் அழுத்தத்தின் பேரில் அவர்கள் தன் மீது பொய்யான வழக்கு தோடர்வதற்கு காவல் துறையினர் மீண்டும் மீண்டும் முயற்சிக்கின்றனர். என கருணாநிதி வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும் தனது வயலுக்கு செல்லும் வழிப்பாதையில் உள்ள அரசு பொறம் போக்கு நில விவகாரம் குறித்து தான் ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் அவ்வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக அப்போது தெரிவித்தார். மேலும் அதனடிப்படையில் வயலுக்கு அப்பாதை வழியாக செல்ல நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளேன் இருப்பினும் தன்னை விளைந்து நிற்கும் கதிரினை அறுவடை செய்யாமல் தடுத்து வருகின்றனர்.என்றார் அவர்.
இந்நிலையில் தன்னோடு வயலுக்கு செல்லும் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ள தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமாவிடம், கருணாநிதி, புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அதிமுக பொதுச் செயலாளர் அனுமதியுடன் மிகப்பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார். இந்நிகழ்வின் போது அவருடன் அதிமுக வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், வழக்கறிஞர்கள் பாலமுருகன், கர்ணன், குமார், அய்யப்பன், மற்றும் வழக்கறிஞர்கள் அதிமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.





















