திருவாரூர், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்..
சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பதுக்குறித்த விழிப்புணர்வு பேரணி திருவாரூரில் நடைப்பெற்றது. அப்பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தற்போது நாடு முழுவதும் நாள்தோறும் அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்து வரப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அப்பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்ததோடு இந்த நவீன உலகில் செல்போன் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாததாக உள்ளதெனவும்,, மேலும் அதன் மூலம் பல்வேறு குற்றங்கள் நடைபெற்று வருவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும் குறிப்பாக மாணவர்கள் முதல் அனைவரும் செல்போன் மற்றும் லேப்டாப் கணினி ஆகியவற்றை கையாளும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தேவையில்லாத வாட்ஸ் அப் அழைப்புகள், எஸ் எம் எஸ் மூலம் வரும் அழைப்புகளுக்கு யாரும் பதில் அளிக்க வேண்டாம் என்றும், புத்தக வாசிப்பை மாணவர்கள் அதிகபடுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
தெற்கு வீதியில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய அப் பேரணி கமலாயக்கரை வடக்கு வீதி வழியாக புது தெருவில் உள்ள நியூ பாரத் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி வரை சென்றடைந்தது.
அப் பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் சைபர் கிராம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.




















