இரும்பு நெஞ்சத்துடன் பணி யாற்றி வரும் காவல் துறைக் காவலர்கள் நெஞ்சங் களிலும் இளகிய மனது உண்டா ? என்றெண் ணும் அளவிற்கு உடன் பணி யாற்றி வரும் இலக்கியா எனும் பெண் காவலருக்கு செங்கல் பட்டு தாலுகா காவல்நிலைய காவலர்கள் ஒன்றாகக் கூடி நடத்தி வைத்த வளைக்காப்பு வியப்பை அளிக்கிறது. அப் பகுதி பொது மக்களிடையே ..

 

காஞ்சிபுரம்: ஏப்.30-

செங்கல்பட்டு தாலுக்கா காவல் நிலை யத்தில் இலக்கியா என்பவர் பெண் காவலராக பணி யாற்றி வருகிறார். இவரது கணவர் ராசு தனியார் அரசி ஆலையில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிர வாண்டி முட்டியாம் பூண்டி கிராமத்தை சார்ந்த இலக்கியா, அதே பகுதியைச் சேர்ந்த ராசுவை திருமணம் செய்துக் கொண்டார். இதற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதனால் தனியாக வசித்து வந்த நிலையில் தற்போது இலக்கியா ஒன்பது மாதக் கர்ப்பிணியாக இருக்கிறார். அவருக்கு வளைக் காப்பு செய்ய பிறந்த வீடும் புகுந்த வீடும் புகழிடம் தர மறுத்தது போன்றே, அவருக்கு வளைக் காப்பை செய்யவும் இரு வீட்டார் மனமும் இளக வில்லை, இதனால் சக பெண் காவலர் களிடம் தன் மன வருத்தத்தை பகிர்ந்துக் கொண்டார் இலக்கியா

 

 

இதனை சக காவலர்கள் மூலமாக அறிந்த காவல் ஆய்வாளர் இளங்கோவன், மற்ற காவலர் களுடன் ஆலோசனை செய்து இலக்கியா வுக்கு வளை காப்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தனர். இதை யடுத்து ஆளுக் கொரு செலவை ஏற்றுக் கொண்டு தங்களது சொந்த சகோதரிக்கு செய்வது போல வளை காப்பு நிகழ்ச்சியை நடத்த எண்ணி காவலர்கள் 30க்கும் மேற் பட்டோர் ஒன்றாக கூடி தங்களால் இயன்ற சிறு தொகையை போட்டு இலக்கியா வுக்கு பட்டுப் புடவை, மற்றும் 9 வகையான சாப்பாடு எனவும் சம்பிர்தாய நிகழ்வுகளான ஆரத்தி எடுத்து, கையில் வளைகாப்பு அணிவித்து ஆசீர் வதித்தனர்.

சக காவலர்கள் எடுத்த இந்த வளைகாப்பு விழா பெண் காவலர் இலக்கியாவை மட்டுமன்றி அந்தப் பகுதி பொது மக்களையும் மனம் நெகிழ செய்தது. இரும்பு நெஞ்சத்துக் குள்ளும்  இப்படி இளகிய மனம் உண்டா என அவர்கள் எண்ண ஓட்டத்தை  நமது சமுதாய பார்வை பக்கத்துக்கான செய்தி சேகரிக்கும் குழுவால் உணர முடிந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here