தருமபுரி, செப். 30 –

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையக் கட்டடத்தை திறந்து வைத்தார். மேலும் பள்ளிக் கல்வித்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை , வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 17 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 11 முடிவுற்ற திட்டப்பணிகளையும் திறந்து வைத்தார்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவீர சிகிச்சை பராமரிப்பு மையக் கட்டடம் கீழ் தளம் மற்றும் நான்கு தளங்களாக அமைக்கப் பட்டுள்ளது.

இக் கட்டடத்தின் கீழ் தளத்தில் அவசர ஊர்தி மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம், ஆக்சிஜன் கட்டுப்பாட்டு அறை, பார்வையாளர்கள் காத்திருப்பு பகுதி மருந்தகம் மற்றும் மின் அறை ஆகிய வசதிகள் கொண்ட பகுதியாகும்.

தரைத்தளத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு, பிரசவப் பிரிவுகள், காத்திருப்பு அறையும், உள்ளன.

முதல் தளத்தில் அறுவை அரங்குகள், தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் பிரசவத்திற்கு பின் கவனிப்பு பிரிவும் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது,

இரண்டாம் தளத்தில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுள்ளது.

மூன்றாம் தளத்தில் பிரசவத்திற்கு பின் கவனிப்பு பிரிவுகள் மற்றும் தனிமைப் படுத்தப்பட்ட பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.

இம் மையத்தில் சிகிச்சைப் பெற ஏதுவாக தரைத்தளத்தில் 33 படுக்கைகளும், முதல் தளத்தில் 22 படுக்கைகளும், இரண்டாம் தளத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான 95 படுக்கைகளும், மூன்றாம் தளத்தில் 50 படுக்கைகளும் என மொத்தம் 200 படுக்கை வசதிகள் உள்ளன.

இதன் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் தரமான முறையில் உயர்தர சிகிச்சை வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந் நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி.என்.வி.எஸ். செந்தில்குமார் , சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி, எஸ்.பி. வெங்கடேஷ்வரன், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் டாக்டர் தாரேஸ் அகமது, தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் டி.எஸ். செல்வ்விநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர் நாராயணபாபு, தரும்புரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் கே அமுதவள்ளி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here