இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர் கிறிஸ் கெய்லின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 97 பந்துகளில் 11 பவுண்டரி, 14 சிக்சர்களுடன் 162 ரன்கள் குவித்து இந்த ஆட்டம் பலன் இல்லாமல் போனாலும் அவர் 10 ஆயிரம் ரன்னை எடுத்து புதிய சாதனை நிகழ்த்தினார்.

கெய்ல் 55 பந்தில் சதத்தை எடுத்தார். 88-வது ரன்னை தொட்ட போது அவர் 10 ஆயிரம் ரன்னை எடுத்தார். 288 ஒருநாள் போட்டியில் விளையாடி 10,074 ரன் எடுத்துள்ளார். சராசரி 38.01 ஆகும். 25 சதமும், 50 அரை சதமும் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 215 ரன் குவித்துள்ளார். 10 ஆயிரம் ரன்னை எடுத்த 2-வது வெஸ்ட்இண்டீஸ் வீரர் என்ற பெருமையை கெய்ல் பெற்றார்.

லாரா 289 ஆட்டத்தில் விளையாடி 10,405 ரன் எடுத்துள்ளார். அவரது சாதனையை கெய்ல் உலககோப்பை போட்டியில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலககோப்பை போட்டியோடு ஒருநாள் ஆட்டத்தில் ஓய்வு பெற போவதாக அவர் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

நேற்றைய ஆட்டத்தில் 14 சிக்சர்கள் அடித்தன் மூலம் கெய்ல் சர்வதேச போட்டியில் 500 சிக்சர்களை எடுத்தார். டெஸ்ட் (98), ஒருநாள் போட்டி (305), 20 ஓவர் ஆட்டம் (103) ஆகிய மூன்றிலும் சேர்த்து 506 சிக்சர்கள் விளாசி உள்ளார்.

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் மார்கன் 6 ஆயிரம் ரன்னை தொட்டார். ஒருநாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்னை எடுத்த முதல் இங்கிலாந்து வீரர் ஆவார். நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி மொத்தம் 24 சிக்சர்கள் அடித்து உலகசாதனை படைத்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here